Assembly Election Results 2021 LIVE: 5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம்

Sun, 02 May 2021-11:06 am,

Assembly Election Results 2021 LIVE: 5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம்

புதுடெல்லி: 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசங்களில் (Assembly Election Result 2021) சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் (Election Commission) அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணத் தொடங்கியது, மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கும். இதன் மூலம், மாநிலத்தில் எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என்பது தெளிவாகிவிடும்.

Latest Updates

  • புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    புதுச்சேரியில் முடிவு தெரிந்த ஏழு தொகுதிகளில் என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி 4 இடங்களிலும், பிஜேபி 2 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

  • புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்

    என்.ஆர்.காங் -9
    காங்கிரஸ் -3
    மற்றவை -1

  • இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம்: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கொரோனா விதிமுறைகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என 5 மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம்.

  • அசாம் மாநில தேர்தல் நிலவரம்: 

    அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சோனேவால் தெரிவித்துள்ளார்.

  • மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    202 இடங்களில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், கொல்கத்தாவில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. வீடியோவை பார்க்கவும்.

     

     

  • புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்: 

    தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, என்.ஆர்.காங் -8, காங்கிரஸ் -3 மற்றவை -1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

  • தேர்தல் நிலவரம்: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்நாடு தேர்தல் நிலவரம்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    கேரள தேர்தல் நிலவரம்: திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி, தான் போட்டியிட சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னிலை வகிக்கிறார்.

    தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா கட்சி அசாமில் ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகிறது என அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

  • கேரள முதல்வர் தொகுதி நிலவரம்!

    கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னிலை வகிக்கிறார்.

  • தேர்தல் ஆணையம் நிலவரப்படி: காலை 11.08 மணி!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    புதுச்சேரி தேர்தல்: 6 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், 2 ல் பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் தலா 1 இடங்களில் முன்னிலை. 

    கேரள தேர்தல்: சிபிஐ (எம்) 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் 20 இடங்களில் முன்னிலை.

    அசாம் தேர்தல் முடிவுகள்: பாஜக 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதன் கூட்டணி கட்சி அசோம் கண பரிஷத் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான AIUDF 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

    மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: திருணாமூல் காங்கிரஸ் -166 மற்றும் பாஜக -83 இடங்களில் முன்னிலை. 

    தமிழ்நாடு தேர்தல் நிலவரம்: 76 இடங்களில் திமுக முன்னிலை, 68 இடங்களில் அதிமுக வகிக்கிறது என தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகிறது.

  • மேற்கு வங்க தேர்தல்: காலை 10:40 மணி நிலவரப்படி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    170 இடங்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு: 112 இடங்களில் டி.எம்.சி முன்னிலை, 58 இடங்களில் பாஜக!

    காலை 10:40 மணி நிலவரப்படி: டி.எம்.சி 112 இடங்களில் பாஜகவை விட முன்னிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பாஜக 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • மேற்கு வங்க தேர்தல் முன்னணி நிலவரம் -பெரும்பான்மையை நோக்கி..!!

    ஆரம்ப வாக்கு எண்ணிக்கையில் திருணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மையைக் கடந்து முன்னிலை பெற்றுள்ளது. 70% தபால் வாக்கு எண்ணிக்கையில், டி.எம்.சி 147 பெரும்பான்மை இடங்களை கடந்தது.

  • மேற்கு வங்க தேர்தல் முன்னணி நிலவரம்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடிகரும், திருணாமூல் காங்கிரஸ் வேட்பாளருமான சோஹம் சக்ரவர்த்தி தற்போது சண்டிப்பூரில் முன்னிலை வகிக்கிறார். 

  • தேர்தல் ஆணையம் நிலவரப்படி: டி.எம்.சி 45 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியின் உத்தியோகபூர்வப்படி, திருணாமூல் காங்கிரஸ் 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் சுயேந்து அதிகாரம் தற்போது மம்தா பானர்ஜியை விட முன்னிலையில் உள்ளார்.

  • கேரள தேர்தல் நிலவரம்: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    எல்.டி.எஃப் (LDF) 90 இடங்களிலும், யு.டி.எஃப் (UDF) 48 இடங்களிலும், என்.டி.ஏ (NDA) 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

    கேரளாவில் இரண்டாவது சுற்று எண்ணிக்கையின் பின்னர், எல்.டி.எஃப் 90 இடங்களிலும், யு.டி.எஃப் 48 இடங்களிலும், என்.டி.ஏ இரண்டிலும் முன்னிலை பெற்றது.

  • அசாம் தேர்தல் நிலவரம்: 

    பாஜக கூட்டணி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

  • மேற்கு வங்காளம் சட்டமன்ற தேர்தல் 2021 நிலவரம்: 

    நந்திகராமில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

  • மேற்கு வங்காளம் சட்டமன்ற தேர்தல் 2021 நிலவரம்: 

    திருணாமூல் காங்கிரஸ் - 117
    பாஜக - 90
    இடதுசாரி -00
    மற்றவை -00

  • கேரளா தேர்தல் முன்னணி நிலவரம்:

    சிபிஎம் கூட்டணி -63
    காங்கிரஸ்  கூட்டணி -48
    பாஜக கூட்டணி -3
    மற்றவை -3

  • மேற்கு வங்கத்தில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது: திருணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது

    மேற்கு வங்கத்தில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. திருணாமூல் காங்கிரஸ் 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 52 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஐ.எஸ்.எஃப் கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • ஐந்து மாநிலங்களில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவின் இடுக்கியில் இருந்து சில காட்சிகள்!!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

  • மேற்கு வங்கம், கேரளா, அசாம், தமிழகம் புதுச்சேரியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  • இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணிக்கை.

  • தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link