Gujarat Election 2022 Results Live: நாங்க தான் கிங் `இது எங்க ஏரியா உள்ள வராத` மீண்டும் மீண்டும் வெற்றி - மிரட்டும் பாஜக

Thu, 08 Dec 2022-4:45 pm,

Gujarat Assembly Election Result 2022: பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை. மீண்டும் ஆட்சியை தகக்வைக்கும் பாஜக.

LIVE | Gujarat Assembly Election Result 2022: குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 182 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா (BJP) ஆளும் குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தலில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 71.28 சதவீதம் என்ற அளவை விட குறைவு. முதல்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குகளும், 2-வது கட்டத்தில் 64.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. வழக்கமாக இரு முனைப் போட்டியாக இருக்கும் குஜராத் தேர்தலில், இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கும் வாய்ப்புகள் அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.


இருப்பினும், கருத்துக்கணிப்புகளின்படி, குஜராத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, 2017 ஐ விட பாஜக அதிக இடங்களைப் பெறும் என்றும் கணிப்புகள் சொல்கின்றன. 


ஜீ நியூஸ் நடத்திய ஆய்வில், குஜராத்தில் பாஜக 110 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 2017 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் 45 முதல் 60 இடங்களைக் கைப்பற்றும் என்றும், 2017ல் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது.


குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 1 முதல் 5 இடங்களை கைப்பற்றும் என எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டை விட ஆம் ஆத்மி கட்சிக்கு இது பெரிய விஷயம், ஏனெனில் 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. 2017 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி 0.10 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.


இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் தேர்தல் செய்திகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த நேரலைப் பதிவில் இணைந்திருங்கள்...

Latest Updates

  • பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன் -பிரதமர் மோடி ட்வீட்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாஜக தொண்டர்களின் கடின உழைப்பின்றி வரலாற்று வெற்றி சாத்தியமில்லை: குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட்

    பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், கட்சித் தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்தார். கடின உழைப்பாளி அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, " நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலம். நமது தொண்டர்களின் கடின உழைப்பு இல்லாமல் இந்த வரலாற்று வெற்றி ஒருபோதும் சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

     

  • நன்றி குஜராத்.. தலைவணங்குகிறேன் -பிரதமர் மோடி ட்வீட்
    நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்துள்ளனர். குஜராத்தின் ஜனசக்திக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

     

  • 10 ஆண்டுகளுகளில் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக உயர்ந்துள்ளது -அரவிந்த் கெஜ்ரிவால்
    இன்று ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக ஊருமாறியுள்ளது. குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து அக்கட்சி தேசிய கட்சியாக உயர்ந்து விட்டதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சியாக இருந்தது. இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது 2 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது மற்றும் தேசிய கட்சியாக மாறியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

     

  • குஜராத் வெற்றி.. வாழ்த்துக்கூறிய ஜேபி நட்டா
    181 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 157 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநிலக் கட்சித் தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோருக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா இன்று (வியாழக்கிழமை) வாழ்த்துக் கூறியுள்ளார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாஜக தேசியத் தலைவர் நட்டா தனது ட்வீட்டில், "கடந்த இரண்டு தசாப்தங்களில் மோடியின் தலைமையில் குஜராத் வளர்ச்சியின் புதிய சாதனைகளை படைத்துள்ளது. இன்று குஜராத் மக்கள் பாஜகவை ஆசீர்வதித்து வெற்றி அளித்து புதிய சாதனையை படைத்துள்ளனர். இது பாஜக மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.

     

  • குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அகமதாபாத்தில் பாரதிய ஜனதா கட்சியினரின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையத்தின் போக்குகளின்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்று 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

     

  • பாஜக-வின் தேர்தல் முடிவுகள் பற்றி பேசிய காந்திநகர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் "பாஜக குஜராத்தை உருவாக்கியுள்ளது. குஜராத் மக்களுக்கு நாங்கள் சேவை செய்வோம். இது பம்பர் வெற்றி. நாங்கள் 150 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்று முன்பே கூறினோம்," என்றார் 

  • போர்பந்தர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா வெற்றி பெற்றார்

    முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், குஜராத் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர், 2012 மற்றும் 2017ல், பா.ஜ.க-வின் பாபு போக்கிரியாவிடம் தோல்வியடைந்தார்.இந்த தேர்தலில், மொத்வாடியா, 8,181 ஓட்டுகள் வித்தியாசத்தில், போக்கிரியாவை தோற்கடித்தார்.

  • பாஜகவின் மீது மக்கள் நம்பிக்கை:
    பாஜகவின் நல்லாட்சி மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் டுவிட்டரில் கருத்து.

     

  • ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரோட் ஷோ
    குஜராத் சட்டசபை தேர்தல் | ஜாம்நகர் வடக்கு பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா, தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜாவுடன் ஜாம்நகர் ரோட் ஷோ பங்கேற்றுள்ளார். 

    தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்முரை விட 50,456 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  • 2வது முறையாக குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்கவுள்ளார்:
    குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர படேல் 2வது முறையாக டிசம்பர் 12ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரலாறு காணாத வெற்றியை பாஜகவுக்கு அளித்துள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜகா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் (16) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (5) இடங்களில் முன்னிலையில் உள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

  • அனைத்து பிரிவினரும் முழு மனதுடன் பாஜகவுடன் இருக்கிறார்கள் -அமித் ஷா
    “பொய்யான வாக்குறுதிகள், டிராமா அரசியல்" செய்பவர்களை நிராகரித்து வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான பாடுபடும் பிரதமர் நரேந்திரமோடி ஜியின் பாஜகவுக்கு குஜராத் மக்கள் வரலாறு காணாத பெற்றியை வழங்கியுள்ளனர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து பிரிவினரும் முழு மனதுடன் பாஜகவுடன் இருக்கிறார்கள் என்பதை இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது” என்று ட்விட்டரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

  • டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு முதல்வர் பதவியேற்பு விழா: 
    குஜராத் முதல்வர் பதவியேற்பு விழா டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும். இந்த விழாவில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்பார்கள்: மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல்.

     

  • அனைவருக்கும் நன்றி -பாஜகவின் வேட்பாளர் ரிவாபா ஜடேஜா
    என்னை ஒரு வேட்பாளராக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டவர்கள், எனக்காக உழைத்தவர்கள், மக்களிடம் சென்றவர்கள் மற்றும் தொடர்பு கொண்டவர்கள் என அவர்கள் அனைவருக்கும் நன்றி. இது எனது வெற்றி மட்டுமல்ல, நம் அனைவரின் வெற்றி: பாஜகவின் வடக்கு ஜாம்நகர் வேட்பாளர் ரிவாபா ஜடேஜா

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வப் தகவலின்படி, அவர் 31,333 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  • குஜராத் மக்கள் பாஜகவுடன் இருந்தனர். தொடர்ந்து பாஜகவுடன் இருப்பார்கள்- ரிவாபா ஜடேஜா
    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பணியாற்றி "குஜராத் மாடலை" நிறுவிய பாஜகவால் மட்டுமே வளர்ச்சிப்பாதையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என மக்கள் நம்பினர். அதனால் தான் குஜராத் மக்கள் பாஜகவுடன் இருந்தனர். தொடர்ந்து பாஜகவுடன் இருப்பார்கள் என பாஜகவின் வடக்கு ஜாம்நகர் தொகுதி வேட்பாளர் ரிவாபா ஜடேஜா தெரிவித்துள்ளார்.

  • பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களில் முன்னிலை
    தேர்தல் ஆணையத்தின்படி, குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் 3 இடங்களில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது.

     

  • பாஜக அமோக வெற்றி.. இனிப்புகள் வழங்கி கொண்டாடும் பாஜகவினர்.
    குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோர் குஜராத் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முதல்வர் தனது தொகுதியான கட்லோடியாவில் 1,07,960 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

     

  • அதிர்ச்சி அளிக்கும் குஜராத் தேர்தல் முடிவுகள் -குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர்
    குஜராத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால் இது எங்கள் தவறு இல்லை -குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    "பாஜக ஆட்சி அமைக்க குஜராத் மக்களின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் இந்த முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன" என்று தாக்கூர் கூறினார்.

    ஜனநாயகத்தில் மக்களின் வாக்குகள் தான் முக்கியம். அதான் இறுதி முடிவு என்று கூறிய தாகூர், "காங்கிரஸ் கடுமையாகப் போராடியது. ஆனால் நாங்கள் ஆட்சி அமைக்கத் தவறிவிட்டோம். ஆட்சி அமைக்கப் போகிறவர்களுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

  • குஜராத் மாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டது -பிரகலாத் ஜோஷி
    குஜராத் மாடல் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி

  • பிரதமர் மோடியின் அரசியல் மீண்டும் வெற்றி: பிரதீப்சிங் வகேலா
    குஜராத்தில் பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கான அரசியல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மாநில மக்களுக்கு எனது நன்றி: பிரதீப்சிங் வகேலா, பாஜக பொதுச் செயலாளர், குஜராத்

  • குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள்: 
    பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று அனைத்து தேர்தல் சாதனைகளையும் தகர்த்துள்ளது.

  • ஜடேஜாவின் மனைவி ரிவாபா முன்னிலை
    குஜராத் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கையின் போது பின்தங்கி இருந்த பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா, தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

     

  • குஜராத் தேர்தல் முடிவுகள்எல் முன்னிலை நிலவரம்:
    குஜராத் தேர்தல் முடிவுகள் | தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான தகவலின்படி, மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 152, காங்கிரஸ் -18, ஆம் ஆத்மி - 7, மற்றவை -5 என முன்னிலை வகிக்கிறது.

  • ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி முன்னிலை:
    குஜராத் தேர்தல் முடிவுகள் | கம்பாலியா தொகுதியில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி இதுவரை மொத்தம் 18,998 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

  • ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள: ஆம் ஆத்மி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குஜராத் மக்களின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி இன்று தேசிய கட்சியாக மாறப்போகிறது.

    வளர்ச்சிக்கான அரசியலிலும், தேசிய அரசியலிலும் முத்திரை பதித்து வருகிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    - கோபால் ராய் (ஆம் ஆத்மி)

     

  • இந்திய தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை: பாஜக எம்.பி.
    2000-2001 முதல் குஜராத் மாடல் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. குஜராத் மக்களுக்கும் பாஜகவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேர்தல் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும்: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.

  • பிஜேபியின் முதல்வர் முகமான பூபேந்திர படேல் கட்லோடியாவிலிருந்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன.

    குஜராத் மாடல் 2000-2001 முதல் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேசத்தின் முன் நாங்கள் முன்வைக்கும் மாதிரி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குஜராத் மக்களுக்கும் பாஜகவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குப்பதிவு வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும் என்று நாடாளுமன்ற அலுவல்த்துறை அமைச்சர் பிரஹலத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

  • குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அண்மை நிலவரப்படி, பாஜக 142 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    விராம்காம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் ஹர்திக் படேல் முன்னிலை வகிக்கிறார்; ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

     

  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக 123 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா 61 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக முதல் அதிகாரப்பூர்வமான தரவுகள் தெரிவிக்கின்றன.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆனால், 132 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி 40 மற்றும் ஆம் ஆத்மி 6 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன.

     

  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்று 123 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 3 இடங்களிலும், மற்றவர்கள் 1 இடத்திலும் முன்னணியில் உள்ளனர்.

  • குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. 36 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் 9 தொகுதிகளுலும், ஆம் ஆத்மி கட்சி 2 இரண்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link