LIVE தந்தை-தாய் உடலுக்கு மகள்கள் தீமூட்டினர்

Fri, 10 Dec 2021-5:00 pm,

டெல்லியில் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு!

சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று நடைபெறுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரியின் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று டெல்லியில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.


ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி இல்லத்தில் வைக்கப்படும்.



 

Latest Updates

  • முப்படை தலைமை தளபதிக்கு மகள்கள் செய்யும் இறுதிக் சடங்கு!! 
    மறைந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்களான கிருத்திகா மற்றும் தாரிணி, தங்கள் பெற்றோருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தீவிர நாட்டுப்பற்றும், முற்போக்கு சிந்தனையும் ஒன்றிணைந்த நபராக வாழ்ந்த பிபின் ராவத்திற்கும் அவரது மனைவிக்கும் அவர்களது மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். 

     

  • முப்படை  தலைமைத் தளபதிக்கு இறுதி அஞ்சலி:
    மறைந்த முப்படை  தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் இறுதி சடங்கு செய்யும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

     

  • ஜெனரல் ராவத்தின் மரணம் குறித்து தகாத செய்திகளை ட்வீட் செய்தால் நடவடிக்கை

    'முப்படை தலைமை தளபதி ஜெனரல் ராவத்தின் மரணம் குறித்து வக்கிர மனதுடன் சிலர் கேவலமான செய்திகளை ட்வீட் செய்துள்ளனர். இவ்வாறு இடுகை இடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் தெரிவித்துள்ளார்.

  • WATCH VIDEO:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி: மறைத்த முப்படை  தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்க தகனத்தை நோக்கி இறுதி ஊர்வலம் செல்லும் போது, "ஜப் தக் சூரஜ் சாந்த் ரஹேகா, பிபின் ஜி கா நாம் ரஹேகா" (இந்த உலகில் சூரியன் மற்றும் நிலவு இருக்கும் வரை, பிபின் ராவத்தின் பெயரும் இருக்கும்) என்று கோஷங்களை பொதுமக்கள் எழுப்பினர்.

     

  • ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி காமராஜர் சாலையில் அமைந்துள்ள முப்படை  தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    டெல்லி கண்டோன்மெண்ட் மைதானத்திற்கு ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் ராணுவ வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

  • ஜெனரல் பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்

    ராணுவ நெறிமுறைகளின்படி, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை வழங்கப்படும். ராணுவ இறுதிச் சடங்குகள் மற்றும் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் லாஸ்ட் போஸ்ட் மரியாதைக்கு பிறகு, குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்வார்கள். 

  • ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஊகங்களை தவிர்க்கவும் 

    2021 டிசம்பர் எட்டாம் தேதியன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF, முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்க, தகவல் இல்லாத ஊகங்களைத் தவிர்க்கலாம் என்று இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.

  • ‘நான் ஒரு சிப்பாயின் மனைவி...புன்னகையுடன் அவரை அனுப்ப வேண்டும்' 

    'நாம் அவருக்கு ஒரு நல்ல பிரியாவிடை கொடுக்க வேண்டும், புன்னகையுடன் அவரை அனுப்ப வேண்டும், நான் ஒரு சிப்பாயின் மனைவி.’ என்று தைரியமாகக் கூறினார் பிரிகடர் எல்எஸ் லிட்டரின் மனைவி கீதிகா. அவரது உறுதியைப் பார்த்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். இந்திய ராணுவம், மற்றும் ராணுவ வீரர்களின் நாட்டுப்பற்றுக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது!!

  • திமுக எம்.பிக்கள் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்துக்கு இறுதி அஞ்சலி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடலுக்கு, திமுகவின் கனிமொழி, ஆ. ராசா என பல தமிழகத் தலைவர்கள் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உட்பட பல அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலிசெலுத்தினார்கள்.
    இந்தியாவுக்கான பிரெஞ்சு மற்றும் இஸ்ரேல் தூதர்கள், இம்மானுவேல் லெனியன் மற்றும் நார் கிலோன் ஆகியோரும் சிடிஎஸ் பிபின் ராவத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

  • கோர்க்கா ரைபிள்ஸ் அணி இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கோர்க்கா ரைபிள்ஸ் அணியின் 5/11 பிரிவு சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. 

    1978ஆம் ஆண்டில், பதினொன்றாவது கோர்க்கா ரைபிள்ஸின் ஐந்தாவது பட்டாலியனில்தான், ஜெனரல் ராவத் முதன்முறையாக ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார், அவர் இந்த பிரிவையும் அவர் வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இன்று மாலை 5 மணியளவில் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. ஜெனரல் ராவத்தின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெறும்.

    சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் காம்ராஜ் மார்க் இல்லத்தில் நாளை 1100-1230 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும், ராணுவ வீரர்கள் 1230-1330 மணி நேரம் வரை அஞ்சலி செலுத்தலாம்.

    முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராவத்தின் இறுதி ஊர்வலம் காமராஜ் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடங்கி ப்ரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு சென்றடையும். 

  • உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல், அவர்காது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ராவத் தம்பதிகளின் இரு மகள்களிடமும் உள்துறை அமைச்சர் வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார்.

  •  பிரிகேடியர் லிடருக்கு பாதுகாப்பு அமைச்சர் அஞ்சலி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜெனரல் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லிடர் ஆகிய மூவரின் சடலங்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    பிரிகேடியர் எல்எஸ் லிடரின் மனைவியும் மகளும் டெல்லி கான்ட், பிரார் சதுக்கத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பிரிகேடியர் லிடரின் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் இறுதி அஞ்சலி செய்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link