Rajasthan Election Results 2023: ராஜஸ்தானில் பட்டையை கிளப்பும் பாஜக!!

Sun, 03 Dec 2023-6:12 pm,

Rajasthan Election Results 2023: ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது கடந்த 30 ஆண்டுகால வழக்கமாக இருகின்றது. ராஜஸ்தானின் தேர்தல் போரில், ஆட்சி மாறுமா அல்லது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்குமா?

Rajasthan Election Results 2023: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் , ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்காளிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து இன்று சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. நாளை மிசோரம் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வியாழனன்று வெளிவந்த நிலையில், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமையக்கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது கடந்த 30 ஆண்டுகால வழக்கமாக இருகின்றது. ராஜஸ்தானின் தேர்தல் போரில், ஆட்சி மாறுமா அல்லது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்குமா?

Latest Updates

  • Rajasthan Election Result 2023 LIVE: கதறி அழுத ஹன்ஸ்ராஜ் படேல்

    - ஜெய்ப்பூர்-கோட்புட்லி தொகுதியில் பாஜகவின் ஹன்ஸ்ராஜ் படேல் வெற்றி பெற்றார்.
    - வெற்றிச் செய்தி கிடைத்ததும் ஹன்ஸ்ராஜ் படேல் கதறி அழுதார்
    - பாஜகவின் ஹன்ஸ்ராஜ் படேல் 315 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    - தனகாஜி தொகுதியில் காங்கிரஸின் காந்தி மீனா 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    - ஜலவர்-மனோகர்தனா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் கோவிந்த் பிரசாத் வெற்றி பெற்றார்.

  • Rajasthan Election Result 2023 LIVE: வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்

    ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ வேட்பாளர் தியா குமாரி ஜெய்ப்பூரில்,  “இந்த வெற்றியின் பெருமை பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா, மாநில தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கே உரித்தானது. ராஜஸ்தான் மற்றும் எம்பி மற்றும் சத்தீஸ்கரில் மோடி ஜியின் மேஜிக் வேலை செய்தது... மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வோம். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு இனி நிலைத்திருக்கும். யார் முதல்வர் என்பதை கட்சியின் தலைமைத் தலைமை முடிவு செய்யும்" என்று கூறினார்.

  • Rajasthan Election Result 2023 LIVE: கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்

    மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலத் தேர்தல்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Rajasthan Election Result 2023 LIVE: அடுத்த முதல்வர் இவர்தானா?

    ஆன்மிகத் தலைவரும் அல்வார் எம்.பி.யுமான மஹந்த் பாலக்நாத், ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு பாஜகவின் முன்னணிப் போட்டியாளராக உள்ளார்.

  • Rajasthan Election Result 2023 LIVE: எனக்கு மிக்க மகிழ்ச்சி-பிரகலாத் ஜோஷி

    மத்திய அமைச்சரும், பாஜக ராஜஸ்தான் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி, "பாஜக -வின், நேர்மறையான அர்ப்பணிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்... மக்கள் காங்கிரஸை நிராகரித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சி எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது, கர்நாடகா, ஹிமாச்சலத்தில் மக்கள் அதை பார்த்துள்ளனர். அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்...எனக்கு மிக்க மகிழ்ச்சி, ராஜஸ்தானில் 124 சீட்களையாவது தாண்டுவோம்..." என கூறியுள்ளார்.

  • Rajasthan Election Result 2023 LIVE: சமீபத்திய நிலவரம் என்ன?

    தேர்தல் ஆணைய இணையதள புதுப்பித்தலின் படி, ராஜஸ்தானில் பாஜக 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் 71 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி 2 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும், ஆர்எல்டி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 

  • Rajasthan Election Result 2023 LIVE: முடிவுகள் எதிரொலி.. இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

    நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று கார்கே அறிவித்துள்ளார். ஏற்கனவே, 3 சுற்று கூட்டங்கள் முடிந்த நிலையில் அடுத்த சுற்று கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

  • Rajasthan Election Result 2023 LIVE: பாஜகவினரின் கொண்டாட்டம் ஆரம்பம்

    ராஜஸ்தானில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.

  • Rajasthan Election Result 2023 LIVE: ஆறு சுற்றுகளுக்குப் பிறகு பா.ஜ.க முன்னிலை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பில்வாரா சட்டசபை சுற்று 6 அசோக் கோத்தாரி (சுயேச்சை) - 694 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    அசிந்த் சட்டசபை சுற்று 5 ஜப்பார் சிங் சங்கலா (பாஜக) - 3665 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    ஜஹாஸ்பூர் சட்டமன்ற தொகுதி சுற்று 7 கோபிசந்த் மீனா (BJP) - 9846 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    ஷாபுரா சட்டசபை சுற்று 6 லாலா ராம் பைர்வா (பாஜக) - 21695 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    சஹாதா சட்டசபை சுற்று 5 லடு லால் பிடாலியா (BJP) - 15435 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    மண்டல்கர் சட்டமன்ற சுற்று 3 கோபால் கண்டேல்வால் (BJP) - 6145 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    மண்டல் சட்டமன்ற சுற்று 5 உதய் லால் பதானா (பாஜக) - 7292 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    கோட்டா தெற்கு எட்டாவது சுற்றில் காங்கிரஸின் கின்ராகி கவுதம்  - 2800 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

    முதல்வர் அசோக் கெலாட் - 1177 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    கோட்டா வடக்கு தொகுதியில் காங்கிரஸின் சாந்தி தரிவால் - 1800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  • Rajasthan Election Result 2023 LIVE: பாஜக தொடர்ந்து முன்னிலை

    ராஜஸ்தானில் பாஜக 117 இடங்களை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 இடங்களிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  • Rajasthan Election Results 2023 Live: மாலை 6:30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    இன்று மாலை 6:30 மணிக்கு பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாடவிருக்கிறார் என கூறப்படுகின்றது. மாலை 6:30 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • Rajasthan Election Results 2023 Live: 10 மணி நிலவரப்படி யார் முன்னிலை? 

    பாஜக-103
    காங்கிரஸ்-81
    பகுஜன்-00
    மற்றவை-15

  • Rajasthan Election Results 2023 Live: ஆட்சி எங்களுடையதுதான்!!!

    மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத், "ராஜஸ்தானில் பா.ஜ., அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மத்திய பிரதேசத்தில் பா.ஜ., 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சத்தீஸ்கரிலும் நாங்களே ஆட்சி அமைப்போம்” என்று கூறியுள்ளார். 

  • Rajasthan Election Results 2023 Live: சமீபத்திய நிலவரம் என்ன?

    ராஜஸ்தானில் சமீபத்திய நிலவரப்படி பாஜக 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 62 இடங்களிலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

  • Rajasthan Election Results 2023 Live: சச்சின் பைலட் முன்னிலை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    - ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 1173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    - பச்பத்ரா தொகுதியில் காங்கிரஸின் மதன் பிரஜாபத் 4177 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

    - ஜெய்ப்பூர் விராட்நகர் தொகுதியில் 3வது சுற்றில் பாஜகவின் குல்தீப் தங்கர் 2337 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

  • Rajasthan Election Results 2023 Live: பெரும்பான்மையை தாண்டியது பாஜக..!

    ராஜஸ்தானில் பாஜக 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 80 இடங்களிலும் மற்றவை 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

  • Rajasthan Election Results 2023 Live: வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது

    அல்வர் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, ​​இவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

  • Rajasthan Election Results 2023 Live: அசோக் கெலாட் முன்னிலை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    - ஜோத்பூரில் உள்ள சர்தார்புராவிலிருந்து ஜோத்பூர் அசோக் கெலாட் 742 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    - அல்வார் நகரில் நடந்த முதல் சுற்றில் பாஜகவின் சஞ்சய் சர்மா முன்னிலையிலும், ஜெய்ப்பூரில் இருந்து பாஜகவின் பிரேம்சந்த் பைர்வா முன்னிலையிலும் உள்ளனர்.

    - டோங்க் தியோலி யூனியாரா சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய் பெயின்ஸ்லா 303 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    - பாஜக 95 இடங்களில் முன்னிலை பெற்றது.

  • Rajasthan Election Results 2023 Live: ஜெய்பூர் முன்னிலை நிலவரம்

    ஜெய்ப்பூரில் உள்ள ஆதர்ஷ் நகர் தொகுதியில் காங்கிரஸின் ரபீக் கானும், டோங்க் சட்டமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட்டும் முன்னிலையில் உள்ளனர்.

  • Rajasthan Election Results 2023 Live: காலை 8:30 மணி நிலவரப்படி முன்னிலை விவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காங்கிரஸ் - 15

    பாஜக - 38

    மற்றவை - 00

  • Rajasthan Election Results 2023 Live: முன்னிலை நிலவரம்

    ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடந்த 199 தொகுதிகளில் 109 இடங்களுக்கான நிலவரங்கள் வெளியான நிலையில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

  • Rajasthan Election Results 2023 Live

    தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் பாஜக தலைவர் சிபி ஜோஷி, "பொதுமக்கள் பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மையுடன் வாக்களித்துள்ளனர். தவறான நிர்வாகமும் அநீதியும் தோற்றுவிடும்; நல்லாட்சியும் நீதியும் வெல்லும்" என்று கூறினார்.

  • Rajasthan Election Results 2023 Live

    ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, "எங்கள் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை விட முடிவுகள் சிறப்பாக இருக்கும். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சியை தக்க வைப்போம். மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, தெலுங்கானாவிலும் ஆட்சி அமைப்போம்" என்று கூறியுள்ளார். 

  • 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ஜால்ராபட்டன், டாக், மனோஹர்த்தனா மற்றும் கான்பூர் ஆகிய இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு தொடங்கியது. 7239 தபால் வாக்குகள் எண்ணப்படும்.
    8,68,552 EVM வாக்குகள் எண்ணப்படும். EVM வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. 

  • ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்-2023 வாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள் வந்து விட்டனர். நிர்வாகத்தால் வழங்கப்படும் பாஸ் மூலம் நுழைவு வழங்கப்படுகிறது.

  • ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சியை பிடித்தால், முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்? தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கட்சி முதல்வர் வேட்பாளரை பற்றி எதுவும் தெளிவாக தெரிவிக்கவில்லை. எனினும், பாஜக ஆட்சி அமைத்தால், முதல்வர் பதவிக்கான போட்டியில் சில தலைவர்கள் முன்னணியில் உள்ளனர்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    1. வசுந்தரா ராஜே

    2. சிபி ஜோஷி

    3. பாபா பாலக்நாத்

    4. தியா குமாரி

    5. மஹந்த் பிரதாப் பூரி மகாராஜ் 

  • காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் அசோக் கெலாட்டின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும், காங்கிரஸ் அசோக் கெலாட்டை முதல்வராக அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகக்கூடும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களின் லிஸ்ட் இதோ

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    1. அசோக் கெலாட் 

    2. சச்சின் பைலட்

    3. கோவிந்த் சிங் தோதசரா 

    4. சிபி ஜோஷி 

    5. கோவிந்த் ராம் மேக்வால் 

  • கருத்துக்கணிப்பு: பங்கீடு எப்படி உள்ளது?

    கணிக்கப்பட்ட வாக்குப் பங்கீட்டின் படி, காங்கிரஸ் 42 சதவீத வாக்குகளையும், பாஜக 41 சதவீத வாக்குகளையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் தவிர பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 2 சதவீத வாக்குகளையும், மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 15 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கணிப்பு: யாருக்கு எவ்வளவு இடங்கள்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வியாழனன்று வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 96 இடங்களும், பாஜக -வுக்கு 90 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

    Pollstrat - பாஜக: 100-110 இடங்கள், காங்கிரஸ்: 90-100 இடங்கள், மற்றவை: 0 

    Matrize - BJP: 115-130 இடங்கள், காங்கிரஸ்: 65-75 இடங்கள், மற்றவை: 0

    Axis My India - பாஜக: 80-100 இடங்கள், காங்கிரஸ்: 86-106 இடங்கள், மற்றவை: 0-3 இடங்கள்

    Jan Ki Baat  - பாஜக: 100-122 இடங்கள், காங்கிரஸ்: 62-85 இடங்கள், மற்றவை:0 -3 இடங்கள் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link