ஆன்லைனில் மது விற்பனை செய்ய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்:: உச்சநீதிமன்றம்
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு மதுபானத்தை வீட்டு விநியோகம் செய்வது குறித்து மாநில அரசுக்கள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
புது டெல்லி: கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் மதுபான விற்பனை செய்யும் கடைகளில் சமூக விலகல் குறித்து தெளிவு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இருப்பினும், வீட்டு விநியோகத்தை பரிசீலிக்க மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச், 'இது தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. ஆனால் மாநில அரசுகள் வீட்டு விநியோகத்தையும் சமூக தூரத்தை பராமரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மே 4 முதல் நடைமுறைக்கு வந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில், மாநில அரசுகளுக்கு மதுபான விற்பனையை மத்திய அரசாங்கம் அனுமதித்தது. எவ்வாறாயினும், மதுபானக் கடைகளுக்கு வெளியே சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியிருந்தது. இதற்குப் பிறகு, பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. சமூக விலகல் போன்ற லாக்-டவுன் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது.
சிறப்பு கொரோனா கட்டணம்:
டெல்லியில் முதல் நாளிலேயே, நீண்ட வரிசைகள் மற்றும் சமூக தூரத்தை கைபிடிக்காமல் அனைவரும் மதுபானத்தை வாங்கி சென்றதால், மதுபானங்களுக்கு "சிறப்பு கொரோனா கட்டணம்" விதிப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது மதுபானத்தின் விலையை 70 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில், மேலும் பல மாநிலங்களும் மதுபான விற்பனைக்கு செஸ் வரி விதிக்க முடிவு செய்துள்ளன.
சத்தீஸ்கர் பஞ்சாபில் வீட்டுக்கு மதுபானங்களை விநியோகம்:
பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருவதால் வீட்டுக்கு மதுபானங்களை விநியோகிக்கப்படுகின்றன. ஏப்ரல் 7 முதல் பஞ்சாபில் வீட்டு மதுபான விநியோகம் தொடங்கியது. அதே நேரத்தில், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க உத்தரவு உள்ளது. இது தவிர, சத்தீஸ்கரில் பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் சுமார் 120 ரூபாய் கூடுதலாக செலுத்துவதன் மூலம் வீட்டுக்கு மதுபான விநியோகத்தை பெற முடியும்.