புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா காரணமாக நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன. அந்தவகையில் கொரோனா பரவலை (Coronavirus) கட்டுப்படுத்த டெல்லியில் ஊரடங்கு (Lockdown) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டெல்லியில் (Delhi) கொரோனா பரவலைக் (Coronavirus) கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை (Lockdown) நீட்டித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) உத்தரவிட்டுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரும் ஆக்சிஜனை பிரித்து அனுப்ப 2 அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


ALSO READ | பரிதாபம்! கொரோனா வைரசால் 38 கர்ப்பிணிகள் பலி


கொரோனா வைரசால் ஏற்படும் அழிவு தொடர்கிறது. எனவே, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில் டெல்லியில் கொரோனாவால் 72 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 சதவீதம் வரை சென்ற பாசிட்டிவ் விகிதமும் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 8 ஆயிரத்து 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்து 140 பேர் டிஸ்சார்க் ஆகியிருக்கின்றனர். 289 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இத்தகைய சூழலில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரம் அளவிற்கு குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாசிட்டிவிட்டி விகிதம் 11 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதன்மூலம் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் குறைந்துவருவது புலப்படுகிறது. இதனை சாத்தியமாக்கிய மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR