மிசோரம் மாநிலத்தில் இருக்கும் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில், முதல்முறையாக பெண் ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை மக்களவைத் தேர்தலில் கட்சியின் சார்பிலோ, சுயேச்சையாகவோ பெண்கள் யாரும் போட்டியிட்டதில்லை.


முதல்முறையாக 63 வயது பெண்மணி, லல்த்லாமௌனி (Lalthlamuani) என்ற பெண் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மிசோரம் மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


இவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இஸ்ரேலின் தொலைந்து போன பழங்குடிகள் என்று அழைக்கப்படும் இனமக்களில் இவரும் ஒருவர். அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு சமூக சேவைகள் செய்து வருகிறார். மிசோரம் பகுதியில் இருக்கும் யூத மக்களுக்காக என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெற்கு அய்ஸ்வால் தொகுதியில் போட்டியிட்டு லல்த்லாமௌனி, 69 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.