லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
Lok Sabha Elections 2024, Phase 2: மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்தடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை) 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது.
கடும் வெப்பத்திற்கு மத்தியில் வாக்கு
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வெளியேறும் போது, கடும் வெப்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 7 இடங்கள், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்கள் என கேரளாவில் மொத்தமுள்ள 20 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 1 இடங்களுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.
மேலும் படிக்க - மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
88 தொகுதிகளுக்கு 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
தேர்தல் ஆணையத்தின்படி, மக்களவைத் தேர்தலுக்கான 2 ஆம் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆக இருந்தது.
கேரளாவில் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்
28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவின் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை போல கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும் கேரளா, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு முடிவடையும்.
கேரளாவில் 2,77,49,159 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், அவர்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்கள்.
இரண்டாம் கட்ட தேர்தல் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நடிகரும் அரசியல்வாதியுமான அருண்கோவில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் (காங்கிரஸ்), கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகவும், பாஜகவின் ஹேமமாலினியும் போட்டியிடுகின்றனர். ஓம் பிர்லா மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க - வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!
லோக்சபா தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்
முன்னதாக ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவில் தமிழ்நாடு (39), உத்தரகாண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1) மற்றும் லட்சத்தீவு (1) ஆகிய அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
அதாவது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற ஏழு கட்ட தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
மக்களவைத் தேர்தல் 2024 முழு ஆட்டவனை
நாடு முழுவதும் 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை என ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19 (நிறைவு)
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - மே 7
நான்காம் கட்ட வாக்குப்பதிவு - மே 13,
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு -மே 20
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு - மே 25
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு - ஜூன் 1
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
தேர்தல் நாளில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வளாகத்தில் வாக்குச் சாவடிகளாக செயல்படுவதால் மூடப்பட்டிருக்கும். நாளை நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ