வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி ஏப்ரல் 26 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாரானாசி தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.  எப்ரல் 26  ஆம் தேதியே வாரணாசி செல்லவுள்ள பிரதமர் மோடி, ஊர்வலத்திலும், கங்கை நீராட்டத்திலும் பங்கேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஏப்ரல 26 தேதி மன தாக்கல் செய்தற்கு முன்னதாக காசி விஷ்வநாதர் ஆலையத்தில் வழிபாடு நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி  மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.  இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில், ‘கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருந்தார். 


தற்போது 2019 ஆம்  தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை எதிர்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம், இன்னும் வாரணாசி தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இன்னும்  வேட்பாளர் அறிவிக்காததால் பிரியங்கா மீது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 


பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, கட்சித் தலைவர்கள் ஜே.பி.நாதா, லக்ஷ்மன் ஆச்சார்யா, சுனில் ஓஸா மற்றும் அஷுடோஷ் டான்டன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளார். அதைத் தொடர்ந்து காலபைரவர் கோவிலில் வழிபாடு, பின்னர் கங்கை ஆரத்தி ஆகியவற்றில்  பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளர்.