Lok Sabha Election Results 2024 : சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து... பாஜகவுக்கு செக்..!
Lok Sabha Election Results 2024 : ஆந்திராவில் ஆட்சியை பிடித்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு தெரிவிக்கபோகும் என சந்திரபாபு தெரிவிக்க இருந்த நிலையில், அவரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Chandrababu Naidu, Lok Sabha Election Results 2024 : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் ஆகியோர் வசம் 30 தொகுதிகள் இருப்பதால் அவர்கள் கிங்மேக்கராக மாறியுள்ளனர். அவர்களின் ஆதரவு இருக்கும் கூட்டணியே இப்போது மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இணைந்து ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலை சந்தித்தார். இதில் ஆட்சியமைக்க தேவையான 130க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து சந்திரபாபு நாயுடு ஆந்திரா மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.
அதேநேரத்தில், சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்கும் கூட்டணி மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். பாஜக கூட்டணியில் இருந்தாலும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் அவர் இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இந்தியா கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சந்திரபாபு நாயுடுவின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர். ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் அவருக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சரத்பவார் ஆகியோர் தொலைபேசி மூலம் அழைத்து சந்திரபாபு நாயுடுவை வாழ்த்தினர். அத்துடன் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கப்படும் என்ற வாக்குறுதி காங்கிரஸ் தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர் எந்த கூட்டணியில் இடம்பெறலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலையே கடிதம் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக சந்திர பாபு நாயுடுவின் செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆந்திராவில் புதிய ஆட்சி அமைக்க இருப்பதால், அதற்கு வாய்ப்பு கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மத்தியில் கூட்டணி அமைப்பது குறித்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பை திடீரென ரத்து செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு. அவர் இந்தியா கூட்டணிக்கு திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பவன் கல்யாண் கட்சியும் ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ