புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உ.பி. சண்டேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது எதிர் அணியை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். 8 தொகுதிகள், 10 தொகுதிகள் 20-22 மற்றும் 35 தொகுதிகள் வெற்றி பெறுபவர்கள் கூட பிரதமராக ஆவதற்கு கனவு காண்கிறார்கள் என கிண்டல் செய்யும் விதமாக மோடி பேசினார். ஆனால் மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி எனவும் கூறினார் பிரதமர் மோடி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துல்லியத்தாக்குதல், வான்வழி தாக்குதல், குடியுரிமை சட்டத்தை, மூன்று முறை தலாக் தடை சட்டம் உட்பட மத்திய அரசு கொண்டுவந்த அனைத்து சட்டங்களை எதிர்ப்பது தான் எதிர்கட்சிக்கு வேலை. ஒவ்வொரு அசைவிலும் மோதியை எதிர்ப்பதே எதிர்கட்சி தலைவர்களின் வேலையாகவே இருக்கிறது. 


21 ஆம் நூற்றாண்டில் வாழும் இளைஞர்களுக்கு நாட்டை 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டு செல்லத் தயாராக இல்லை. அப்பொழுது ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ஊழல் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டிய நிலை இருந்தது. 


ஆனால் எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. நமது வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம். ஆபத்து எல்லைகளுக்குள்ளாகவோ அல்லது எல்லைக்கு வெளியவோ எங்கு இருந்தாலும் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்.