மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்
Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், இந்த முறையாவது கேரளாவில் பாஜக திடமாக கால் பதிக்குமா என்ற கேள்வி உள்ளது. கேரளாவிலிருந்து இதுவரை பாஜக சார்பில் ஒரு எம்பி கூட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் கேரளாவில் பாஜக இரண்டு மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மற்றும் சசி தரூர் போன்ற காங்கிரஸின் பெரிய தலைவர்களும் இன்று களம் காண்கின்றனர். ராகுல் காந்தி வயநாட்டிலிருந்தும், சஷி தரூர் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்கள்.
இன்று களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்:
உத்தர பிரதேசத்தின் மதுராவிலிருந்து ஹேமமாலினி, உத்தர பிரதேசத்தின் மீரட்டிலிருந்து அருண்கோவில், கர்நாடகாவின் பெங்களூரு தெற்கிலிருந்து தேஜஸ்வி சூர்யா, ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து ஓம் பிர்லா, மேற்கு வங்கத்தின் பாலூர்காட்டிலிருந்து சுகந்தா மஜும்தார் ஆகியோரும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் களத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்.
இன்றைய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, ஜம்மு & காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த தொகுதிகளில் மொத்தமாக சுமார் 15.88 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 1,202 வேட்பாளர்களின் தலைவிதி இந்த வாக்களர்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படும்.
இன்று முக்கிய போட்டி யாருக்கு?
- திருவனந்தபுரத்தில் 3 முறை எம்.பி.யாக இருந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை எதிர்த்து போட்டியிட, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறங்கியுள்ளது.
- ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.
- வயநாட்டில் இம்முறை காங்கிரஸ் (Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர்.
- நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கே முரளிதரனை முன்னிறுத்தியுள்ளது.
- சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜ்நாங்கன் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் களமிறங்குகிறார்.
- கர்நாடகாவில், கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியிலும், எம்.லட்சுமணன் மைசூருவிலும் போட்டியிடுகின்றனர்.
- பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி போட்டியிடுகிறார்.
- உத்தரபிரதேசத்தில் மதுரா மற்றும் மீரட் தொகுதிகளில் முறையே ஹேமமாலினி மற்றும் அருண் கோவில் போன்ற பாஜக-வின் பெரிய தலைவர்கள் போட்டியிடுவார்கள்.
மேலும் படிக்க | 'மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்...' காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ