போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர் ஒருவர் வாக்களர்களி காலணிகளை மெருகேற்றி (Shoe Polishing) ஓட்டு கேட்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஸ்டிரிய ஆம்ஜம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சரத் சிங் குமார். தங்களது கட்சிக்கு காலணி(Shoe) சின்னம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தனது சின்னத்தினை மக்களின் மனதில் பதியவைக்கும் விதமாக வாக்காளர்களின் காலணிகளை மெருகேற்றி ஒட்டு கேட்டு வருகின்றார்.


யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு சின்னத்தினை தங்களது கட்சி தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பலரால் ஒதுக்கப்பட்ட ஒரு சின்னம் எங்களுக்கு வாழ்த்து பொருளாக அமையும் எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கின்றனர்.



சரத் சிங் இதுகுறித்து தெரிவிக்கையில்... காலணி என்பது யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு சின்னம். எனவே எங்களது வெற்றியை தடுக்க நினைக்கு வேட்பாளர்கள் வாக்களர்களை ஒத்த மாதிரியான சின்னங்களை பெற்று குழப்பத்தில் ஆழ்த்த முடியாது. இது எங்களின் வெற்றிச் சின்னம் என தெரிவித்துள்ளார்.


சரத் சிங் மட்டும் இவ்வாறு வித்தியாசமான பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை., தெலங்கான மாநில கொர்தலா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அகுல ஹனுமந்த் என்பவரும் ஒரு வித்தியாசமான முறையினை கையாண்டு வருகின்றார். 


ஹனுமந்த் கொடுக்கப்பட்டுள்ள சின்னம் காலணி(Slipper) தான். சுயேட்சை வேப்பாளரான இவர் தனது சின்னத்தினை மக்களின் மனதில் பதியவைக்க ஒரு சோடி செருப்புகளை வழங்கி வருகின்றார். மேலும் தேர்தலுக்கு பின்னர் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்சத்தில் தான் கொடுத்த காலணியால் தன்னை அடியுங்கள் என தெரிவித்து வாக்கு சேகரித்து வருகின்றார்.