மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த இரு பெண்களும் விற்பனை செய்வதற்காக 30  கிலோ மாட்டுக் கறியுடன் ரயிலில் வந்துள்ளனர். இதுகுறித்து போலீசாக்கு சிலர் பசு இறைசியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக போலீசார் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி கோஷமும் போட்டபடி தாக்கினர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- இவர்கள் பசுவின் இறைச்சியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர். இருப்பினும் இறைச்சி விற்பதற்கு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய முயன்றதாக கூறி இரு பெண்கள் மீதும் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனராம்.


இந்த பிரச்சினையை இன்று பாராளுமன்றத்தின் மாநிலங்கலவையில் எழுப்பினார் இதனால் அமளி ஏற்பட்டது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைத்து தாக்கபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்ககோரி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.