அவுரங்காபாத்: கொரோனா ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு கால்நடையாக புறப்படும் போது, இது அவர்களின் வாழ்க்கையின் கடைசி பயணமாக இருக்கும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கூட சந்திக்க மாட்டார்கள் என நினைத்திருக்க மாட்டார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவுரங்காபாத்தில் வெள்ளிக்கிழமை, ஒரு சரக்கு ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்றது. சம்பவ இடத்திலேயே 16 தொழிலாளர்கள் பலியானார்கள் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த தொழிலாளர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.


சுமார் ​​35 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளனர்.


இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவுரங்காபாத்தில் இருந்து தங்கள் சொந்த வீட்டுக்கு செல்வதற்காக சுமார் ​​35 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில், அவர்கள் சோர்வடைந்ததால், ரயில் பாதையில் தூங்கினார்கள். ஆனால் அவரது தூக்கம் மரணமாக மாறும் என்று அவருக்கு எங்கே தெரிநிதிருக்கும்?


35 கி.மீ தூரம் நடந்த பிறகு, இந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதையில் ஓய்வெடுக்கத் தொடங்கினர். அதிகாலை ஐந்தரை மணிக்கு, அவர்கள் அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த பாதையில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறிச்சென்றது. காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால், யாருக்கும் ரயில் வருவது குறித்து தெரிந்திருக்கவில்லை. வீடு திரும்புவதற்கான அவரது நம்பிக்கைகள் அங்கு முறிந்தன.


அதிகாலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தென் மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராகேஷ் கூறியதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. 


ஜலானில் இருந்து பூசாவலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்திற்குத் திரும்பி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தொழிலாளர்கள் அனைவரும் ரயில் தடங்களில் நடந்து வருவதாகவும், சோர்வு காரணமாக தடங்களில் தூங்குவதாகவும் அவர் கூறினார்.


மகாராஷ்டிரா:


ரயில் பாதையில் தொழிலாளர்களைப் பார்த்ததும், சரக்கு ரயிலின் லோகோ பைலட் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் உடனடியாக அதை செய்ய முடியவில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. காயமடைந்தவர்கள் அவுரங்காபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர, இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


உயிர் இழந்தது குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்: PM Modi


இந்த வேதனையான விபத்து குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்ததோடு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசியதாக தகவல் தெரிவித்துள்ளார்.


விபத்துக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் மூலம் கூறியதாவது, " மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிர் இழந்தது குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலுடன் பேசினேன், அவர் முழு சம்பவத்தையும் கவனித்து வருகிறார். தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படுகிறது. 


அதே நேரத்தில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து, நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரிந்த ஆத்மாக்களின் அமைதிக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.