மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்தது. அந்தவகையில்  தற்போது மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் அந்த கட்சி ‘சிவ போஜன்’ எனப்படும் 10 ரூபாய் மதிய உணவு (தாலி) திட்டத்தை நேற்று அமல்படுத்தியது.


குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 


 



 


 


இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை ரூ.10-க்கு வழங்கப்படும். இந்த சிறப்பு உணவகங்களில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மலிவு விலை மதிய உணவு கிடைக்கும். இந்த திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.