மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பால் கொள்முதல் விலை உயரத்தி தருமாறு பால் பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால் உற்பத்தியாளர்களிடம் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் ரூ.17 முதல் ரூ.21-க்கு வாங்கி, அதை பதப்படுத்தி மார்க்கெட்டில் ரூ.42 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்களுக்கு விலை கட்டுப்படி ஆகவில்லை, எனவே லிட்டருக்கு ரூ.5 உயரத்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தனியார் நிறுவனமும், அரசும் செவி செவிசாய்க்கவில்லை. 


 



 


இதனால் எம்.பி. ராஜு ஷெட்டி தலைமையிலான ஸ்வாபிமானி ஷெட்கரி சங்கதன அமைப்புடன் இணைந்து பால் உற்பத்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பால் தட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக தனியார் நிறுவங்கள் ஏற்றி சென்ற வாகனத்தை போராட்டக்காரர்கள் தடுத்து, வாகனத்தில் இருந்த பால் முழுவதும் சாலையில் ஊற்றினர். மேலும் பால் கொண்ட சென்ற வாகனத்தி நிறுத்தி, அதன்மீது எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். 


தற்போது மகாராஷ்டிரா அரசு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்து உள்ளது,.