மராட்டியத்தில் நாக்பூர் நகர மேயர் மீது துப்பாக்கி சூடு
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகர மேயர் மீது நேற்று நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகர மேயர் மீது நேற்று நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்தீப் ஜோஷி என்பவர் நாக்பூர் நகர மேயராக உள்ளார். இவர் நேற்று நள்ளிரவு தனது காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் திடீரென சந்தீப் ஜோஷியை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடர்கினார். இதில் 3 குண்டுகள் அவரது காரை துளைத்து கொண்டு சென்றுள்ளன.
எனினும், இந்த சம்பவத்தில் இருந்து சந்தீப் ஜோஷி உயிர் தப்பிவிட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தற்போது மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர்.