காஷ்மீர் ஷோபியனில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டை
காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
சோபியான் மாவட்டம் ஷாய்னாபோரா பகுதியில் உள்ள 6 கிராமங்கள் இந்த ஆப்ரேஷனானது தொடங்கியது. அப்பகுதியில் அதிமான பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றன என உள்ளீடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள் இறங்கி உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டையானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.