கேரளாவில் கொலை செய்தவர் கொலை செய்யப்பட்டார்
கேரளாவில் 25 வயதுடைய இந்து மதத்தை சேர்ந்த விபின் தாஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த பிபின் தாஸ் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று பைசல் என்பவரை கொலை செய்தார். இந்த கொலை செய்யப்பட்ட பைசல் என்பவர், முதலில் அவர் அனில் குமார் அலியாஸ் உன்னி என்று இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தார். ஆனால் இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதால், இவர் பைசல் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். பைசல் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருடைய நெருங்கிய உறவினர்களில் சிலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்
பைசலின் கொலைக்குப் பின்னர், மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக பிபின் தாஸ் இருந்தார். ஜாமீனில் வெளிவந்திருந்த பிபின் தாஸ் தனது சொந்த ஊரான திரூரில் இன்று காலை படுகொலை செய்யப்பட்டார். அந்த வழியாக சென்ற ஒரு குழு சாலையின் அருகே மோசமாக படிகொலை செய்யப்பட பிபின் தாஸின் உடலை கண்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.