கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாகன பிரச்சாரத்தை மேற்க்கொண்டார். இந்த பிரசாரத்திற்கு அனுமதியை ரத்து செய்து தடை விதித்தது மேற்கு வங்க அரசு. பின்னர் கடைசி நிமிடத்தில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, அப்பொழுது அங்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் "அமித்ஷா திரும்பிப்போ" என்ற பதாகைகளுடன் கோஷமிட்டனர். இதற்கு பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அங்கு கலவரம் ஏற்ப்பட்டு, அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கலவரம் படிப்படியாக அதிகரித்து ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் கல்லூரியை நோக்கி நகர்ந்தது. கல்லூரியில் இருதரப்பும் போட்ட சண்டையில், அங்கு வைக்கப்பட்டிருந்த வங்கப் புரட்சியாளர் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலை தாக்கப்பட்டு சேதப்படுத்தினர். பெரும் பரபரபப்பு ஏற்ப்பட்டது. பின்னர் போலீசார் தடியடி நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தார். 


இந்தநிலையில், இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமித் ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் தான் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? அவர் என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராடாமல் இருப்பதற்கு? நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். 


நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பது உங்களுக்கு நல்ல காலம் என வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசினார். மேலும் நீங்கள் தவறுகளை செய்தால், அதை நாங்களும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனாலும் நீங்கள் சிந்தித்து பொறுமையாக செயல்படுங்கள். 


கொல்கத்தாவில் பேரணியில் ஈடுபட்ட அமித் ஷா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இருந்து பேரணிக்கு பலரை அழைத்து வந்தார். அதை உள்ளூர் சேனல் காட்டியது, ஆனால் தேசிய சேனல்கள் காட்டவில்லை. பேரணி முடிந்தவுடன், அமித் ஷாவுடன் வந்த பி.ஜே.பி குண்டர்களின் ஒரு கும்பல் வித்யாசாகர் கல்லூரிக்கு புகுந்து நெருப்பு வைத்ததுடன் வித்யாசாகரின் சிலையும் உடைத்து விட்டனர் எனக் கூறினார்.


கொல்கத்தாவில் இதுபோன்ற ஒரு பெரிய சம்பவம் இதுவரை நடக்கவில்லை. நக்சல் காலத்தில் கூட, இதுமாதிரி ஒரு வன்முறையை நாங்கள் பார்த்தது இல்லை. நீங்கள் செய்த ஒவ்வொரு தவறுக்கும் பதில் அளிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.