கொரோனாவை எதிர்த்து போராடும் போர்வீரர்கள், பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டுத் தொகையை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க அரசு ஞாயிற்றுக்கிழமை (மே 3) பத்திரிகையாளர்கள் உட்பட முன்னணி கோவிட் -19 தொழிலாளர்களுக்கு ரூ .10 லட்சம் வரை சுகாதார காப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது.  


இது குறித்து முதல்வர் மமதா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.. "பத்திரிகையாளர்கள் உள்பட கரோனா பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும், பத்திரிகையாளர்கள் கடமைகளை அச்சமின்றி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் கூறினார்.



சமூகத்திற்கு ஊடகவியலாளர்கள் செய்த பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம். அவர்களது நலனுக்காக மேற்குவங்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகறது என்றும் தெரிவித்தார்.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்கத்தில் 33 உயிரிழப்புகள் உள்பட 922 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.