மேற்கு வங்கத்தில், அமைதியாகவும், சுதந்திரமாகவும், மத்திய அரசின் தலையீடு இன்றி பாரபட்சம் இல்லாமல் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தனது வாக்குகினை பதிவு செய்த அம்மாநில முதல்வர மம்தா பானர்ஜி, மத்திய அரசின் நடவடிக்கையால் தான் திருப்தி அடையவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னதாக நடைபெறும் தேர்தல் குறித்து தனது கருத்தினை பதிவு செய்த அவர், மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., மேற்கு வங்கத்தில் இறுதிகட்டமாக மே-19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாகவும், மத்திய அரசின் தலையீடு இன்றி பாரபட்சம் இல்லாமல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 


நாட்டின், ஜனநாயக அமைப்புகள் மற்றும் கூட்டாட்சி தத்துவ்தை காக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். மத்திய அரசின் தலையீடு காரணமாக மாநிலத்தில், சட்ட விரோதமான ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில நிர்வாகம், அதிகாரிகள், சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேற்கு வங்கத்தின் பாரம்பரியம் கலாசாரத்தை சீர்குலைக்கும் சதி திட்டத்துடன் பாஜக செயல்பட்டு வருகின்றது. தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு பார்வையாளர்களும் தங்களது பணியை சரிவர செய்யவில்லை. 


மத்திய அரசு, பாஜக சார்பில்,என்ன அறிவுரை கொடுக்கப்பட்டதோ, அதன்படியே அவர்கள் செயல்பட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.