தலைநகரம் தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 24 ஆம் நாள் அன்று இரவு கேஸ் சிலிண்டரால் தனது மனைவியை அடித்து கொலை செய்த பின்பு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, "என்னை கைது செய்யுங்கள், நான் என் மனைவியை கொலை செய்துவிட்டேன்" என்று கூறி உள்ளார். ஆனால் போலீசாருக்கு யாரோ மது போதையில் உளறுகிறாய் என்று நினைத்துள்ளனர். ஆனால் காவல் துறைக்கு சிறுது சந்தேகம் வர, போலீஸ் அதிகாரி ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலீஸ் அதிகாரி அங்கு சென்ற பிறகு தான் தெரியவந்தது, 26 வயதான சுனில் சர்மா என்பவர், 24 வயதான தன் மனைவியை(கவிதா சர்மா) கேஸ் சிலிண்டரால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அதே சிலிண்டரால் தன்னையும் தாக்கி கொண்டுள்ளார்.


சுனில் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில், சுனில் சர்மாவின் மனைவிக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும், அந்த வாலிபர் கவிதா சர்மாவை அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் சந்தேகித்து உள்ளார். இதனால் சுனில் சர்மா மற்றும் அவரது மனைவிக்கு கடந்த எட்டு மாதங்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதியும், இந்த கள்ளதொடர்பு குறித்து இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்ப்பட்டு உள்ளது. அன்று இரவு தூங்கிக்கொண்டு இருந்த தன் மனைவி மீது 5 கிலோ எடை உள்ள சிலிண்டரை தூக்கி முகத்தில் அடித்துள்ளார். அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கம் யாருக்கும் தெரியவில்லை. தன் மனைவியை கொலை செய்த பிறகு, இரவு சுமார் 2.20 மணிக்கு போலீசாருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.


இவருக்கு நான்கு வயது மகள் இருக்கிறாள். சம்பவம் நடந்த அன்று, அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் அவர் மகள் சென்றிருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.


சுனில் சர்மா கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். இச்சம்பவம் மூலம் குடும்பத்தில் சந்தேகம் வந்தால், அந்த குடும்பம் நிலை என்ன ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். சந்தேகத்தால், மனைவி இறந்துவிட்டால், கணவன் சிறை சென்றுவிட்டான். ஆனால் நான்கு வயது மகளின் கதி என்னவாகும்? அம்மா-அப்பா இருவரின் அன்பில் இருந்து மகள் தனிமை படுத்தப்பட்டாள். "குடும்பத்தில் சந்தேகம் என்பது விசம்"