இறந்த மகளின் உடலை, வீடுவரை தோலில் சுமந்து சென்ற தந்தை!
இறந்த சிறுமிக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் அவரது தந்தை அவரை தோலில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பாட்னா: இறந்த சிறுமிக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் அவரது தந்தை அவரை தோலில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பாட்னாவில் உள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்(AIIMS)-ல் ஆறு நாட்கள் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிர் இழந்ததை அடுத்து அவரை வீட்டிற்கு கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது தந்தை அச்சிறுமியின் உடலை தனது தோலில் சுமந்தவாரே வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறுகையில், மருத்துவமனையில் சிறுமிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும். இறந்த பின்னர் அவரை கொண்டுவர ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளார்!