உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சமீபத்தில் வெளியான ‘அவதார் 2’ படத்தை பெத்தபுரம் நகரில் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். படம் பார்க்க தனது தம்பியுடன் வந்த அந்த நபர் லட்சுமிரெட்டி ஸ்ரீனு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், படத்தின் நடுவில் ஸ்ரீனு மயங்கி விழுந்தார் என்றும்,  அவரது தம்பி ராஜூ உடனடியாக அவரை பெத்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் எனவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. லட்சுமிரெட்டி ஸ்ரீனுவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.


இதே போன்று, தைவானில் 42 வயது நபர் ஒருவர் 'அவதார்' திரைப்படத்தின் முதல் பாகத்தை 2010 ஆம் ஆண்டு வெளியானபோது பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார் என்று ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் 2010 இல் தெரிவித்திருந்தது.  அவரைப் பரிசோதித்த மருத்துவரின் கூற்றுப்படி, "திரைப்படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்ட அதீத உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி" காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. 


மேலும் படிக்க | அவதார் 2 ரிலீஸ் : அடம்பிடித்த டிஸ்னி... புறக்கணித்த திரையரங்குகள் - நிலவரம் என்ன?


ஆந்திரப்பிரதேசத்தில் நடந்த இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்டில் 12 வயது சிறுவன் தனது பள்ளி பேருந்தில் விழுந்து மாரடைப்பால் இறந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.  மாநிலத்தில் மாரடைப்பால் இறந்தவர்கள் குறைந்த பட்ச வயது கொண்ட சிறுவர் இவர் தான்  என்று கூறினார்.


மேலும் படிக்க | Accident: சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு சென்ற சென்னை தாம்பரம் சிறுமி விபத்தில் பலி!


4 ஆம் வகுப்பு மாணவரான மணீஷ் ஜாதவ், வியாழன் மதியம் எட்டாவா சாலையில் உள்ள தங்கள் பள்ளியில் தனது சகோதரருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மதியம் 2 மணிக்கு தனது பேருந்தில் ஏறியவுடன் சரிந்து விழுந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியை... பெற்றோர் அதிரிச்சி


மேலும் படிக்க | அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை டாப்-5 ஸ்மார்ட்போன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ