இம்பால்: 'எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்': பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு விளையாட்டு வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் இந்த திடீர் வன்முறை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் ராணுவத்தால் மீட்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


மணிப்பூரில் வெடித்துள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று குத்துச்சண்டை வீராங்கனை எம்சி மேரி கோம் இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் புதன்கிழமை நடந்த பழங்குடியினரின் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை களத்தில் இறங்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?


இன்று அதிகாலையில் டிவிட்டரில் மேரி கோம் வெளியிட்ட பதிவில், வன்முறையின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை அதில் டேஹ் செய்துள்ளார்.  



இராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் இரவில் இருந்து வன்முறையை அடக்கிவருகின்றனர். மாநில காவல்துறையுடன் இணைந்து, துணை ராணுவப் படைகள் வன்முறையை கட்டுப்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் ராணுவத்தால் மீட்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | இணைய பயன்பாட்டில் பிற நகரங்களையும் உலகையும் பின்னுக்குத் தள்ளும் இந்திய கிராமங்கள்


மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் தாங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக்கூறும் மைத்தேயி இனத்தினர், தங்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு நாகாஸ், ஸோமிஸ், குக்கி ஆகிய பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்


இம்பால் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினர் அல்லாத மைத்தேயி இனத்தினரை, பட்டியல் பழங்குடியில் சேர்க்கக்கூடாது என்று  சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தோர்பங் பகுதியில் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) ஏற்பாடு செய்திருந்த 'பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பு' நிகழ்ச்சியின் போது வன்முறை வெடித்தது.


நேற்று (மே 3, புதன்கிழமை) ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர், இந்த பேரணியின்போது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன, இந்த போராட்டம், மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவியது என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.


மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி


மணிப்பூரில்  வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இணையசேவை 5 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் கூட்டமாக கூட தடை விதித்து 144 சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் முன்வைத்து மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 


மணிப்பூரின் பல மாவட்டங்களில் குக்கி இனத்தவர், மைத்தேயி இனக்குழுவினரை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, மாநிலமே வன்முறையால் கலவர பூமியாக மாறிவிட்டது.


மணிப்பூரில் தொடங்கிய வன்முறைகளும் மோதல்களும், மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியது. இந்த பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ