பாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா மதியம் 2.15 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஹரியானாவில் அரசாங்கத்தை அமைப்பதாக நாங்கள் உரிமை கோரியுள்ளோம். ஆளுநர் எங்கள் முன்மொழிவை ஏற்றுக் கொண்டு எங்களை அரசாங்கத்தை அமைக்க அழைத்தார்" என்று முதலமைச்சர் நியமிக்கப்பட்ட கட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனது ராஜினாமாவை டெண்டர் செய்துள்ளதாகவும் கட்டார் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில்., "நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு, ராஜ் பவனில் சத்தியப்பிரமாணம் நடைபெறும். துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பதவியேற்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


JJP தலைவர் துஷ்யந்த், கட்டருடன் சேர்ந்து ஆளுநர் சத்யடியோ நரேன் ஆர்யாவை சந்தித்தபோது அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தர். இந்நிகழ்வில் ஏழு சுயாதீன சட்டமன்ற உறுப்பினர்களும் அங்கு கலந்து கொண்டனர்.


இதனிடையே ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் தண்டனை பெற்றதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள JJP தலைவர் துஷ்யந்த் தந்தை அஜய் சௌதலாவுக்கு சனிக்கிழமை இரண்டு வாரங்கள் விடுப்பு அவகாசம் வழங்கப்பட்டது. அவரது மகன் சத்தியப்பிரமாணம் ஏற்கும் விழாவில் அவர் பங்கேற்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


என்றபோதிலும் துஷயந்த் தனது தந்தை தனது குடும்பத்துடன் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாட முடியாது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.


90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்ட சபையில்., 40 உறுப்பினர்களை வென்ற பாஜக, பெரும்பான்மைக்கு ஆறு இடங்களை குறைவாக கொண்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் பேரன் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான JJP-யுடன் வெள்ளிக்கிழமை மாலை ஒரு கூட்டணியை அறிவித்தது.


முன்னதாக, இங்கு நடந்த கூட்டத்தில் கட்டார் ஏகமனதாக பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை சட்டமன்ற உறுப்பினர் அனில் விஜ் முன்மொழிந்தார், மீதமுள்ள 38 சட்டமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து 10 சட்டமன்ற உறுப்பினர்களும், ஏழு சுயேச்சைகளும் கொண்ட ஜே.ஜே.பி ஆதரவுடன் அரசாங்கம் அரசாங்கத்தை அமைக்கப் போகிறது என பாஜக தரப்பு தெரிவித்தது.  இதனையடுத்து துணை முதல்வர் பதவிக்கு JJP தலைவர் துஷ்யந்த் பெயர் அவரது கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது. 


முன்னதாக துணை முதல்வர் பதவிக்கு., துஷ்யந்த் தாயும் JJP தலைவருமான நைனா சிங் சௌதாலாவின் பெயர் துணை முதல்வராக கிசுகிசுக்கப்பட்டது. எனினும் தற்போது துஷ்யந்த் துணை முதல்வர் பதவி ஏற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.