போலீஸ் என்கவுண்டர்: மாவோயிஸ்ட்கள் பலி 27 !!
ஆந்திரா - ஒடிசா எல்லையோர பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலை எண்ணிக்கை 27 ஆக உயர்வு.
புவனேஸ்வர்: ஆந்திரா - ஒடிசா எல்லையோர பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலை எண்ணிக்கை 27 ஆக உயர்வு.
இந்த தாக்குதலில் ஆண் தீவிரவாதிகளும், பெண் தீவிரவாதிகளும் பலியாயினர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் காட்டுப்பகுதி பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு இரு மாநில போலீசார் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தினர். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள், 3 எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள் மற்றும் இதர வகை துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.
ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில போலீசார் இன்று அதிகாலை வனப்பகுதியை சுற்றிவளைத்தனர். வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.