சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஒரு பேருந்தில் குண்டுவெடிக்கச் செய்ததில் மத்தியத் தொழில்காப்புப் படைவீரர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் பச்சேலி என்னுமிடத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்தியத் தொழில்காப்புப் படைவீரர்களை ஏற்றிவந்த தனியார் பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மத்தியத் தொழில்காப்புப் படைவீரர் ஒருவர், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். மாவோயிஸ்ட்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகப் பஸ்தார் ஐஜி சின்கா தெரிவித்துள்ளார்.



சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.