மராட்டிய மாநில மும்பையில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் (Jail bharo andolan) நடத்தப்போவதாக மரத்தா சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் இட ஒதுக்கீடு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  


இந்த நிலையில், தற்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 2 பேர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.


மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில், இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள மராத்தா சமூகத்தினரை விடுவிக்கக் கோரியும், தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்துள்ளனர். 


மேலும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்காவெனில், வரும் ஆகஸ்டு 9 மும்பையில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக மராத்தா சமூகத்தினர் எச்சரித்துள்ளனர்.