கார் விற்பனை குறைந்ததால் 2 நாட்களுக்கு கார் உற்பத்தி ஆலைகள் மூடப்படுவதாக மாருதி நிறுவனம் அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSI) கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது உற்பத்தி சதவிகிதத்தை 33.99% ஆக குறைத்துக்கொண்டுள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசூகி உற்பத்தி செய்திருந்தது. ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பேசஞ்சர் ரக வாகன உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் சரிந்துள்ளது.  


இந்நிலையில், நிறுவனத்தின் பங்குகள் மதியம் 1:19 மணியளவில் 2.36 சதவீதம் சரிந்து. அதாவது, ரூ .142.80 குறைந்து ரூ .5,906.95 ஆக உள்ளது. இந்நிறுவனம் 2019 ஆகஸ்டில் 106,413 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் அறிவிக்கப்பட்ட 158,189 யூனிட்டுகளிலிருந்து குறைந்துள்ளது. 


2018 ஆகஸ்ட் மாதத்தில் ஆல்டோ, புது வேகன் ஆர், செலேரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 1,22,824 ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை சரிந்து 80,909 ஆக உள்ளது. யூவி ரக வாகனங்களான ப்ரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-க்ராஸ் போன்ற கார்கள் 34.85 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விற்பனை இல்லாத காரணத்தாலே தொடர்ந்து தனது உற்பத்தியையும் மாருதி சுசூகி குறைத்துக்கொண்டு வருகிறது.