நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இந்த கொடூர வைரசின் (Coronavirus) தாக்குதலுக்கு அனைத்து பிரிவினரும் சிக்கி வருகின்றனர். அந்தவகையில் இதில் ரயில்வே (Indian Railways) ஊழியர்களும் இந்த மரண நோய்யால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக அளவில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக இந்திய ரயில்வே விளங்குகிறது. சுமார் 13 லட்சம் ஊழியர்கள் இந்த நெட்வொர்க் இல் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். 


ALSO READ | நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR!


அந்தவகையில் இந்தியாவில் இதுவரை தினமும் சுமார் 1000க்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறியதாவது:-


எங்களுக்காக தனி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம். ரயில்வே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை ஏற்படுத்தி இருக்கிறோம். தற்போதைய நிலையில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகளால் 4 ஆயிரம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 1,952 ஊழியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 


இவ்வாறு தெரிவித்தார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR