கடந்த 2 வருடமாக ஜவகர்பாத் பகுதியில் உள்ள 260 ஏக்கர் பூங்காவை  ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அப்போது கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 2 போலீசார் அதிகாரிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். பல பேர் காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. லக்னோவில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யா தரப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்தா சுப்ரீம் கோர்ட்டு மதுரா வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.  மேலும் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. முதலில் உத்தரபிரதேச அரசு மதுரா சம்பவம் தொடர்பாக விசாரணை எதுவும் நடத்தவில்லை என்பதை வெளிப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக போலீஸ் தரப்பில் சரியாக விசாரணை நடத்தப்படவில்லை என்பதையும் நிரூபிக்கப்பட வேண்டும். ஜவஹர்பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தை மனுதாரர் மீண்டும் அனுகியிருக்க வேண்டும் என்றும் என சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் கூறிவிட்டது.