மே 1-ஆம் தேதி முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்படுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை.


இந்த நிலையில் தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 


அந்தவகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. அதன் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி உள்ளார்.