May Day 2021: மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம் இன்று
உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் மே தினம். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகார நாளாகும்.
புதுடெல்லி: உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் மே தினம். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகார நாளாகும்.
உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகின் இயக்கத்திற்கு ஆணிவேராக திகழும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாள் இந்த மே தினம். உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உண்மையான திருநாள் மே தினம்.
சுயநலனின்றி பொதுநலனுக்காக இரவு, பகல் என கால நேரமோ, மழை, வெயில் என எந்தவித இயற்கை உத்பாதங்களையும் தாண்டி உழைப்பு என்னும் ஒற்றை வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு வாழும் தொழிலாளர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நாள் இன்று.
Also Read | 18+ கோவிட் தடுப்பூசிகளுக்கு சிக்கல்; கையறு நிலையில் மருத்துவமனைகள்!
தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடும் குறியீட்டு நாள் இது. மே 1, இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன என்பது கூடுதல் தகவல்.
எட்டு மணிநேர வேலை என்பதன் அடிப்படையில் தொழிலாளர் தினம் முன்னெடுக்கப்படுகிறது. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.
இந்தியாவில் 1927 மே முதல் நாளில் இருந்து தொழிலாளர் வாரம் அனுசரிக்கத் தொடங்கப்பட்டது. பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும், ஊர்வலங்களை நடத்தி, தொழிலாளர்களின் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
Also Read | கோவிட் நோயாளிகளுக்கு மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசம் அவசியம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR