போராட்டம் நடத்தியதாக MCNUJC மாணவர்கள் 23 பேர் நீக்கம்!
கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தியதாக MCNUJC பல்கலை மாணவர்கள் 23 பேர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்!
கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தியதாக MCNUJC பல்கலை மாணவர்கள் 23 பேர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்!
போபாலின் மஹன்லால் சத்ருவேதி தேசிய பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தின் (MCNUJC) இருபத்தி மூன்று மாணவர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு ஒழுங்கு நடவடிக்கையில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"மாணவர்கள் வளாகத்தில் போராட்டம் நடத்தி கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர். அவர்களின் நடத்தை பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்றுக் குழுவால் மோசமான நடத்தை என்று கருதப்பட்டது. வளாகத்திலிருந்து மாணவர்களை பழிவாங்குவதற்கான குழுவின் பரிந்துரைக்கு துணைவேந்தர் தீபக் திவாரி ஒப்புதல் அளித்தார் ”என்று பல்கலைக்கழக பதிவாளர் தீபேந்திர பாகேல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 11-ஆம் தேதி பத்திரிகை, வெகுஜன தொடர்பு, மின்னணு ஊடகங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த மாணர்களில் 11 மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ளிக்கிழமை FIR பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவரான சௌரப்குமார் இதுகுறித்து தெரிவிக்கையில்., “இந்த நடவடிக்கை நியாயமற்றது. இதை நாங்கள் எதிர்ப்போம். பல முன்னாள் மாணவர்கள் தங்கள் பட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்ப உள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். ” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலை கழகத்தின் இரண்டு இணை பேராசிரியர்களான திலீப் மண்டல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரின் பணிகளை நிறுத்துமாறும் மாணவர்கள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வளாகத்தில் மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை துவங்கியுள்ளனர். அதே நேரத்தில் குறித்த ஆசிரியர்கள் "மானுவாட் எதிர்ப்பு சித்தாந்தத்தை" பரப்புவதாகவும், சாதிகள் மற்றும் சித்தாந்தம் என்ற பெயரில் மாணவர்களிடையே விரிசலை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
எவ்வாறாயினும், உடனடி நீதிக்கான மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்று துணைவேந்தர் திவாரி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., "பல்கலைக்கழகத்தின் 10 பேர் கொண்ட குழு ஏற்கனவே இரண்டு இணை பேராசிரியர்களுக்கு எதிரான மாணவர்களின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருகிறது. யாருக்கும் எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உரிய செயல்முறை கொண்டு நடத்தப்படவேண்டும். மேலும் அவர்களது தரப்பை முன்வைக்கவும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது. ஆனால் மாணவர்கள் பேராசிரியர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள், இது நியாயமற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.