#MeToo ஹாஷ்டேக் மூலம் எம்.ஜே. அக்பர் மீது இதுவரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உள்ளது.

 

இதைத்தொடர்ந்து, எம்.ஜே. அக்பர் பதவி விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

 

இந்நிலையில், எம்.ஜே. அக்பர் தனக்கு எதிராக முதலில் பாலியல் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்கின்ற பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் நேற்று எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாக எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

 

இன்று பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வருகிறது.