பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக மறுத்துவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். #MeToo விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், #MeToo மூலம் 11-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். 


இதைத்தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த புகார்கள் குறித்து எம்.ஜே.அக்பர் பதில் அளிக்க வேண்டும் எனவும் சக பெண் அமைச்சர்களான மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.


மேலும் ‘இந்த பிரச்சினை குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’ என கட்சித்தலைவர் அமித்ஷா அறிவித்தார். இதற்கிடையே அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகியதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்ததாகவும் நேற்று தகவல் வெளியானது. ஆனால் அந்த செய்திகளை மத்திய அரசு வட்டாரங்கள் பின்னர் மறுத்து விட்டன.


இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் எம்.ஜே.அக்பர் நேற்று காலையில் டெல்லி விரைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து எம்.ஜே.அக்பர் மாலையில் அறிக்கை வெளியிட்டார். அதில், " தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதா குறிபிட்டுள்ளார். மேலும் ராஜினாமா கோரிக்கையை அவர் நிராகரித்து உள்ளார்.