புதுடெல்லி: அடுத்த வாரம் பாஜகவில் சேர்ந்து அரசியல் களத்தில் இறங்க உள்ள மெட்ரோ மேன் என்ற தொழில்நுட்ப வல்லுநர் ஈ.ஸ்ரீதரன், கேரளாவில் கட்சி ஆட்சிக்கு வர உதவுவதே தனது முக்கிய நோக்கம் என்றும், கட்சி விருப்பபட்டால் முதலமைச்சராக சேவை செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக (BJP) வெற்றி பெற்றால், உள்கட்டமைப்பை பெரிய அளவில் அபிவிருத்தி செய்வதையும், மாநிலத்தை கடன் வலையில் இருந்து விடுவிப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


‘மெட்ரோமேன்’ என்றும், பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை, குறிப்பாக, மெட்ரோ ரயில் (Metro Rail) திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக,  புகழ் பெற்ற ஸ்ரீதரன், கட்சி விரும்பினால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், கட்சி அனுமதித்தால்  முதலமைச்சராகவும் சேவை செய்ய தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


88 வயதான தொழில்நுட்ப வல்லுநரும் ஆளுநர் பதவியில் தனக்கு ஆர்வம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார், இது முற்றிலும் "அரசியலமைப்பு பதவி என்பதோடு அதற்கு எந்த அதிகாரமும் இல்லை" என்றும், அதன் மூலம் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் தனால் செய்ய முடியாது என்றும் கூறினார். 


“எனது முக்கிய நோக்கம் கேரளாவில் (Kerala) பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவதுதான். கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாம் கவனம் செலுத்த விரும்பும் மூன்று நான்கு முக்கிய பகுதிகள் உள்ளது. ஒன்று உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றொன்று தொழில்துறையை மாநிலத்திற்கு கொண்டு வருவது, ”என்றார்.


இப்போது அவர் வசிக்கும் கேரளாவின் பொன்னானியில் இருந்து தொலைபேசியில் பேசிய ஸ்ரீதரன், மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு நிதி ஆணையத்தையும் உருவாக்க வேண்டும், மாநிலம் "இன்று கடன் வலையில்" சிக்கியுள்ளது. ஒவ்வொரு மலையாளியின் தலையிலும் ரூ .1.2 லட்சம் கடன் உள்ளது என்றார்.


பாரதீய ஜனதா கட்சியில் (BJP) அவர் இணைந்தது தேர்தலை சந்திக்க உள்ள கேரளாவில் கட்சிக்கு ஒரு பெரிய ஊக்க சக்தியாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தை இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மாறி மாறி ஆளுகின்றன.


“நான் ஏன் பாஜகவைத் தேர்ந்தெடுத்தேன் என்றால், அது இரு காரணத்திற்காக. கேரளாவில் உள்ள மற்ற இரண்டு கூட்டணிகளான - யுடிஎஃப் மற்றும் எல்.டி.எஃப் - கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன…. அவர்களால் எந்தவொரு உறுதியான முன்னேற்றத்தையும் மாநிலத்திற்கு கொண்டு வர முடியவில்லை, கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தொழில் கூட மாநிலத்திற்கு வரவில்லை” என்றார்.


"மாநில அரசுகள் எப்போதும் மத்திய அரசுடன்  சண்டையிட்டுக் கொண்டிருப்பதால்,  மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பாஜக இங்கு ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு மத்திய அரசுடன் நல்லுறவு இருக்கும், வளர்ச்சி ஏற்படும் ”என்றார். 


ALSO READ | DRDO தயாரித்த ஹெலினா, துருவாஸ்திரா ஏவுகணைகள் விரைவில் ராணுவத்தில் இணைகிறது.!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR