இன்று காலையில் ஜோத்பூரில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட மிக் 27 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானபடைக்கு சொந்தமான MiG 27 ரக பயிற்சி விமானம் ஜோத்பூரில் இருந்து ஒரு வழக்கமான பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து ராஜஸ்தான் சிரோஹியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியது. 


இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  இதற்கிடையில், காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்தனர். பைலட் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உறுதிப்படுத்தினார். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்த பைலட்க்கு முதலுதவி செய்து வருகிற்றனர்.