உத்தர பிரதேசம்: நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் (COVID-19) நாடு தழுவிய அனைத்து மாநிலங்களில் 21 நாட்கள் லாக்-டவுன் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேச நகரத்திற்கு வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள் என பரேலி மாவட்ட மாஜிஸ்திரேட் நிதீஷ் குமார் திங்களன்று தெரிவித்தார். கிருமிநாசினி இருக்கலாம் எனக் சந்தேகிக்கப்பட்ட ஒரு கும்பல் மீது கெமிக்கல் கலந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, ட்விட்டரில் வெளிவந்த பின்னர், சாலையின் ஒரு மூலையில் நகரங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் மீது கெமிக்கல் கலந்த தண்ணீர் தெளிக்கப்படுவதைக் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களின் ஒரு பகுதியினர்  இப்படி நடத்தப்படுவதை விமர்சித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


"இந்த தண்ணீரில் சோடியம் ஹைபோகுளோரைட்டுடன் கலக்கப்பட்டுள்ளது" என்று பெயரிட விரும்பாத தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த அதிகாரி தெரிவித்தார்.


“எனக்கு இந்த வீடியோப் பற்றி தெரியாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக நகரத்திற்குள் நுழையும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களை சுத்திகரிக்க எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது” என்றார் ஒரு அதிகாரி.


இதுக்குறித்து ஒரு மருத்துவர் கூறுகையில், “குளோரின் அளவைப் பொறுத்து (திரவம் தண்ணீரில் கலக்கும்போது), இது தோலில் தடவினால் எரிதல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.” மேற்பரப்புகளை சுத்தப்படுத்த கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.


அப்படி இருக்கையில் எப்படி தங்கள் சொந்த ஊருக்கு வந்த மக்களின் மீது பரிசோதனை என்ற பெயரில், கெமிக்கல் கலந்த தண்ணீர் தெளிக்கலாமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.