ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாக்., சிறுவன் கைது!
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை தாண்டியதாக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை தாண்டியதாக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர காவல் படையினர், எல்லைப் பகுதியை அத்துமீறி கடந்ததாக பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் பகுதியே சேர்ந்த சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு நடத்த இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் 8 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இச்சிறுவனை பின்னர் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இச்சிறுவன் கவனக்குறைவாக எல்லையை கடந்து வந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. பின்னர் சட்டரீதியான நடைமுறைகள் முடித்தப்பின்னர் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூன் 15-ஆம் நாள் இதேப்போன்று பாக்கிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் அத்துமிறி எல்லை தாண்டியதாக எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கவனக்குறைவின் காரணமாக அவர்கள் எல்லை கடந்ததாக தெரிவித்து விடுவிக்கப்பட்டனர்.