பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; எம்.எல்.ஏ. மகனுக்குத் தொடர்பா?
Minor Girl Gang rape: ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் எம்.எல்.ஏ.வின் மகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று இரவு தனது நண்பருடன் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார். அவரது நண்பர் முன்னதாகவே வீட்டிற்குச் சென்றுவிட அதிகாலை 5.30 மணியளவில் அச்சிறுமி வீட்டிற்குச் செல்ல கிளம்பியுள்ளார். அப்போது விடுதியில் இருந்த சிலர் தங்களது அவரை வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பி அச்சிறுமியும் அவர்களுடன் சென்றுள்ளார்.
ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரை நிறுத்திய அவர்கள், அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அச்சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததைக் கண்ட அவரது தந்தை சிறுமியிடன் கேள்வி எழுப்பியுள்ளார். தந்தையிடம் உண்மையை மறைத்த சிறுமி தன்னை சிலர் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க | 12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது
இதனைத் தொடர்ந்து, பெண் அதிகாரிகள் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தியபோதே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் பள்ளி சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பென்ஸ் காரில் வந்ததாக அச்சிறுமி கூறியுள்ளார். மேலும், அச்சிறுமியால் யாரையும் அடையாளம் காட்ட இயலவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒரே ஒருவரின் பெயரை மட்டும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்களில் எம்.எல்.ஏ. ஒருவரின் மகனும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுவர்களை கேளிக்கை விடுதிக்குள் அனுமதித்தது எப்படி என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR