Covishield செய்த மாயம்; படுத்த படுக்கையாக இருந்தவரை நடக்க வைத்த தடுப்பூசி!
பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.
ஜார்கண்டில் சுமார் 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நபருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அடுத்த நாள் எழுந்து நடக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல், அவர் பேசவும் ஆரம்பித்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ழ்சியிலும் வியப்பிலும் ஆழ்ந்தனர்.
விபத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் முதல் டோஸ் மருந்தை செலுத்திய பின் நடக்கவும் பேசவும் தொடங்கினார் என செய்தி நிறுவனமான PTI செய்தி அறிக்கை கூறுகிறது
பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.
ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்
“அங்கன்வாடி ஊழியர் முண்டாவுக்கு கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை ஜனவரி 4 அன்று, அவரது வீட்டிற்கு சென்ற சுகாதார ஊழியர்கள் செலுத்தினார். அடுத்த நாள், முண்டா எழுந்து நடக்க தொடங்கியதோடு பேசவும் ஆரம்பித்தார் ”என்று பீட்டர்வார் சமூக சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் அல்பெலா கெர்கெட்டா கூறியதாக PTI மேற்கோளிட்டுள்ளது.
பொகாரோவின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிதேந்திர குமார் கூறுகையில், " இந்த அதிசயமான நிகழ்வு" குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முண்டா முதுகுத்தண்டு பிரச்சனையால் படுத்த படுக்கையாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முண்டா, சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் படுக்கையில் முடங்கி போனார். “இது ஒரு ஆச்சரியமான சம்பவம். அவரது மருத்துவ வரலாற்றை நாங்கள் பகுப்பாய்வு செய்வோம், ”என்று சிவில் சர்ஜன் டாக்டர் குமார் கூறினார். மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சல்காதிஹ் கிராம மக்கள் இந்த சம்பவத்தினால் ஆச்சரியமடைந்தனர். இது தெய்வ செயல் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
ALSO READ | Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR