பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். #MeToo விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், #MeToo மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டுளின் உண்மை தன்மை ஆராயப்படும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


இந்நிலையில் நைஜிரியா பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பிய போது #MeToo மூலம் என் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை எம்.ஜே.அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.