கர்னூல்: ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில், கைப்பேசியினை சார்ஜ் செய்கையில் வெடித்து சிதரியதில் 3-ஆம் வகுப்பு சிறுவனது உயிர் கவலைகிடமாக உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ஆச்சாரி. மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவரான இவர் கைப்பேசியினை சார்ஜ் செய்துக்கொண்டு கேம் விளையாடியுள்ளார். அப்போது கைப்பேசி வெடித்து சிதறியுள்ளது.


இந்த விபத்தில் சிறுவனது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. மேலும் பலந்த ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அவரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்ச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


ஞாயிறு அன்று மாலை நடைப்பெற்ற இச்சம்பவமானது RS பெண்டக்கலின் துக்காளி பகுதியில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஜெகனின் தந்தை மத்திலெட்டி ஆச்சாரி தெரிவிக்கையில்... சம்பவத்தன்று தனது மகன் தன் கைபேசியினை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், திடீரென கைப்பேசி வெடித்து சிதறியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் பத்திக்கொண்டே அரசு மருத்துவமனைக்கு ஜெகன் கொண்டுச் செல்லப் பட்டதாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகனை கர்னூல் பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல பணித்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மத்திலெட்டி ஆச்சாரி, இனி குழந்தைகளிடம் கைப்பேசிகளை வழங்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.