புதுடெல்லி: பொருளாதாரத்தில் ஏற்ப்பட்ட மந்தநிலை காரணமாக இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். அதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொழில்துறை தொடங்கி எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து பங்குச் சந்தை, கார்ப்பரேட் வரியைக் குறைத்தது மூலமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சாதனை அளவை எட்டியுள்ளது. நிதியமைச்சரின் அறிவிப்பைப் பிரதமர் மோடி அவர்களும் பாராட்டி உள்ளார். நிர்மலா சீதாராமன் முடிவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். அதாவது, "இது உலகளவில் இந்திய நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், கார்ப்பரேட் வரி குறைப்பது குறித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையாக இருந்தது. இது இப்போது உண்மையாகி உள்ளது. இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களை உலகளவில் போட்டியிடும் மற்றும் இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கும்.


இந்தியாவை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது, இந்த முடிவும் அன்னிய நேரடி முதலீட்டை தளர்த்துவது குறித்த முந்தைய அறிவிப்புகளும் இந்த நோக்கத்தை உணர்ந்து கொள்வதில் நீண்ட தூரம் செல்லும். பிரதமரை வாழ்த்துகிறேன். இந்த தைரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நிர்மலா சீதாராமன் அவர்களையும் பாராட்டுகிறேன்.


 



முன்னதாக, இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கவும், அதே வேளையில் வரியைக் குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சலுகை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கானது. கார்ப்பரேட் வரி எந்த விலக்குமின்றி 22 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். மேலும், உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். இதற்காக, 1.5 லட்சம் கோடி நிவாரண நிதியும் மத்திய அரசு அறிவித்தது.