காவிரியின் குறுக்கே மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரியின் குறுக்கே மேகதாதில் 5912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 


சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டித் தண்ணீரைக் குடிநீருக்காக எடுக்கவும், நானூறு மெகாவாட் நீர்மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.


ஆனாலும் அணை கட்டும் இடம், செலவு, அணையின் அளவுகள், நிலவியல், நீரியல் கூறுகள் ஆகியவை அடங்கிய வரைவு அறிக்கையைக் கர்நாடக அரசு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வரைவு அறிக்கைக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.