மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டு வரும்: அமித் ஷா
நாங்கள் ஜனசங்க மக்கள், எந்த விவகாரத்தை கையில் எடுக்கிறோமோ? அதை சரிசெய்தே தீர்வோம். விரைவில் மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: துர்கா பூஜை தினத்தையொட்டி மேற்கு வங்காளத்திற்கு விஜயம் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), பிரதமர் மோடியின் தலைமையில் மத்தியில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். பாஜக 300 இடங்களை தாண்டி அதிக பெரும்பான்மை பெறுவதற்கு மேற்கு வங்காள மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இங்குள்ள மக்கள் மோடியை நம்பவில்லை என்றால், அது நடந்திருக்காது. அடுத்த சட்டசபை தேர்தலில், மேற்கு வங்காளத்தில் பாஜக அரசு அமைக்கப் போகிறது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.
2014 மக்களவை தேர்தலில் 2 இடங்கள் கிடைத்த எங்களுக்கு, 2019 மக்களவையில் 18 இடங்கள் மக்கள் அளித்துள்ளனர் எனவும் கூறிய அவர், மேற்கு வங்காளம் முழுவதும் பாஜக ஆட்சிக்கு மாறிவிட்டது. 40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 2.5 கோடி பெங்காலி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இதற்குப் பிறகும், கடந்த 4 மாதங்களில் 30 தொண்டர்கள் பலியாகி உள்ளனர். வரவிருக்கும் தேர்தல்களில் இரத்தம் சிந்தியாவது மேற்கு வங்காளத்தில் முழுமையான பெரும்பான்மை பெற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 வது பிரிவை வங்காளம் எதிர்த்துள்ளது. என்று அமித் ஷா கூறினார். ஒரு நாட்டில் இரண்டு அரசியலமைப்புகள் இருக்ககூடாது என்ற முழக்கத்தை ஷியாமா பிரசாத் முகர்ஜி எழுப்பியிருந்தார். அப்பொழுது அவர் கைது செய்யப்பட்டு இறந்தார். இந்த விஷயம் முடிந்துவிட்டது என்று காங்கிரஸ் நினைத்திருந்தது. நாங்கள் ஜனசங்க மக்கள், எந்த விவகாரத்தை கையில் எடுக்கிறோமோ? அதை சரிசெய்தே தீர்வோம். 73 ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பிரிவு 370வது பிரிவை ஒரே நேரத்தில் முடித்துவிட்டோம். எந்த காஷ்மீருக்காக ஷியாமா பிரசாத் முகர்ஜி தியாகம் செய்தாரோ, அந்த காஷ்மீர் நமக்கு சொந்தமாகி உள்ளது.
பாஜக ஒரு வெளி கட்சி என்று மேற்கு வங்காளத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார். மம்தா தீதி (தீதி=அக்கா) நீங்கள் வரலாற்றைப் படிக்கவில்லை… இந்த மேற்கு வங்காளம் முழுவதும் கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய பங்களாதேஷ்) சொந்தமாக போகிறது என்ற சூழ்நிலையில், எங்கள் தலைவர் ஷியாமா பிரசாத், அதனை தடுக்கும் விதமாக முழக்கத்தை எழுப்பினார். இன்று அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது என்றால் அது நம் தலைவரால் தான்.